மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல்


ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றிபெற்றுள்ளது.

16-வது ஐபிஎல் தொடரில் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல் | Tilak Verma Rescued From Collapse Mumbai

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இஷான் கிஷன்(10), ரோகித் சர்மா(1) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.

அடுத்து களம் இறங்கிய கேமரூன் க்ரீன்(5), சூர்யகுமார் யாதவ்(15) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் அந்த அணி 48 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து களம் இறங்கிய திலக் வர்மா மற்றும் நேகால் வதேரா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடியாக ஆடிய வதேரா 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல் | Tilak Verma Rescued From Collapse Mumbai

இதையடுத்து திலக் வர்மாவுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இதில் டேவிட் 4 ரன்னில் வீழ்ந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

இறுதி வரை களத்தில் நின்ற திலக் வர்மா 46 பந்தில் 84 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது.
துவக்க வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய இந்த ஜோடியில் டூ பிளசிஸ் 43 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்து கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலியுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி 73 (43) ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 12 (3) ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அர்ஷத் கான் மற்றும் கேமரான் கிரின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, லீக் சுற்றில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.