வடகொரியாவில் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சி காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது தென்கொரியா.
அதில் சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் உயரம் குறைவான பெண்களுக்கு கருப்பைகள் அகற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.