சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசியின் 14 மாடுகள் கொண்ட கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்த நிலையில் எல்ஐசி கட்டிடத்தின் 14 வது மாடியின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அண்ணா சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று விடுமுறை என்பதால் ஊழியர்கள் இல்லாததால் இந்த தீ விபத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Fire at LIC Building, Anna Salai , #Chennai @dt_next தற்பொழுது எல்ஐசி14 மாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
(Recieved as WhatsApp forward) pic.twitter.com/3hhRBjONjz— Raghu VP / ரகு வி பி / രഘു വി പി (@Raghuvp99) April 2, 2023