சென்னை : பாலிவுட் நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் மும்பையில் நடந்த விழாவிற்கு தனது புதிய காதலியுடன் ஜோடியாக வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அனைவருக்கும் பிடித்த ஹீரோவான ஹ்ருத்திக் ரோஷன் சூசன் கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2014ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
ஹிருத்திக் ரோஷனை பிரிந்த சூசன் கான் தற்போது நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ஹ்ருத்திக் ரோஷன்
பாலிவுட் சினிமாவின் ஸ்மார்ட் அண்ட் ஹேன்ட்சம் ஹீரோவாக ஹ்ருத்திக் ரோஷன் ஏராளமான இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார். பியார் ஹே என்ற இந்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர். கோயி மில் கயா, க்ரிஷ், தூம் மற்றும் ஜோதா அக்பர் போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மனைவியை விவாகரத்து செய்தார்
ஹ்ருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு இண்டீரியர் டிசைனரான சூசன் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஹிரேகான், ஹிருதன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

புது காதலியுடன்
மனைவி சூசனை விவாகரத்து செய்த ஹ்ருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான சபா ஆசாத்தை காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும், இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மனைவியின் முன்னெடுப்பான நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் திறப்பு விழாவிற்கு இருவரும் ஜோடியாக வந்திருந்தார்கள். இதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை சபா ஆசாத்
நடிகை சபா ஆசாத், அண்மையில் ஓடிடியில் வெளியான ராக்கெட் பாய்ஸ் சீசன் 2ல் வழக்கறிஞர் பர்வனா இரானியாக நடித்திருந்தார். தில் கபடி என்ற படத்தின் பாலிவுட்டில் அறிமுகமான இவர், ரொமாண்டிக் காமெடி திரைப்படமான முஜ்சே ஃபிரான்ட்ஷிப் கரோகே படத்திலும், ஒய் ஃபிலிம்ஸ் வலைத் தொடரான லேடீஸ் ரூமில் டிங்கோவாகவும் நடித்து பிரபலமானார். மேலும் சபா ஆசாத், இந்திய இண்டி இசைக்குழுவில் பிரபலமான இசைக்கலைஞராகவும் பாடகராகவும் இருக்கிறார்.