சென்னை : நடிகை ஐஸ்வர்யா மேனன் ஜிம்மில் தாறுமாறாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விடவைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு,மலையாளப்படங்களில் கணிசமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன், பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாகவே இருக்கிறார்.
இணையத்தில் இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர்.
இணையத்தை விரும்பும் நடிகைகள்
இன்ஸ்டாகிராம், ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் நடிகைகளுக்கு பட வாய்ப்பை ஏற்படுத்தி தரும் களமாக மாறி உள்ளதால், பெரும்பாலான நடிகைகள் விதவிதமான புகைப்படங்களை எடுத்து இதில் பதிவிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதன் மூலம் பட வாய்ப்பு வராவிட்டாலும் வருமானம் கன்ஃபார்ம்.

ஐஸ்வர்யா மேனன்
அந்த நடிகைகளின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். நடிகைக்கு உரிய அனைத்து பொருத்தமும் இவருக்கு பக்காவாக இருந்த போதும், இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையாததால், தனது நடிப்பு திறனை நிரூபிக்க முடியாமல் நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

தாறுமாறான வொர்க் அவுட்
இதனால் இணையமே கதி என அதில் பொழுதை கழித்து வரும் ஐஸ்வர்யா மேனன், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவு செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். ஜிம் உடையில் வளைவு நெளிவுகள் அப்பட்டமாக தெரிய ஹாட்டாக தாறுமாறாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் அழகின் ரகசியம் இதுதானா என கேட்டு வருகின்றனர்.

தீபிகா படுகோன் உடன் செல்பி
நடிகை ஐஸ்வர்யா சமீபத்தில் தீபிகா படுகோன் உடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவை ஷேர் செய்து இருந்தார். மேலும், அதற்கு கேப்ஷனாக நான் ஒரு பெண்ணை காதலித்த தருணம். ஐ லவ் யூ தீபிகா படுகோனே என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல குவிந்தன.

கணிசமான படங்களில்
நடிகை ஐஸ்வர்யா மேனன், 2012 ஆம் ஆண்டு சித்தார்த்த், அமலா பால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் சிவா நடித்த தமிழ் படம்2 மற்றும் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.

வாய்ப்பு கொடுத்த டோலிவுட்
தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு சினிமாவில் சென்ற இவர் தற்போது, நிகில் சித்தார்த் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே போல் அஜித்தின் வலிமை பட வில்லன் நடிக்கரான கார்த்திகேயா நடிப்பில் உருவாகும் படத்திலும் ஒப்பந்தமாகி நடிக்கவுள்ளார்.