சென்னை: இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக பிகினி உடைகளை அணிந்து கொண்டு வீடியோக்களை பதிவிட்டு வரும் நடிகை கிரண் அப்படியே டோட்டலாக சேஞ்ச் ஓவராகி திருப்பதியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளன.
சமீப காலமாக நடிகைகள் பலரும் திருப்பதிக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கிரணும் திருப்பதிக்கு விசிட் அடித்துள்ளார்.
திருப்பதியில் சுடிதார் அணிந்து கொண்டு செம ஹோம்லியாக நடிகை கிரண் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சியில் கிறங்கடிக்கும் கிரண்
சியான் விக்ரம் உடன் ஜெமினி, அஜித்துடன் வில்லன், விஜய்யின் திருமலை படத்தில் குத்தாட்டம், பிரசாந்த் உடன் வின்னர், கமல்ஹாசன் உடன் அன்பே சிவம் என முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் நடித்து அசத்திய நடிகை கிரண் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
ஏகப்பட்ட ரீல்ஸ்
கணவரை பிரிந்து தனிமையில் வாடி வரும் நடிகை கிரண் ஏகப்பட்ட ரீல்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போஸ்ட் பண்ணி வருகிறார். கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டும் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொண்டும் இணையத்தை சூடாக்கும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
பக்தி மோட்
இந்நிலையில், கவர்ச்சி ரூட்டுக்கு பிரேக் கொடுத்து விட்டு திடீரென பக்தி மோடுக்கு நடிகை கிரண் மாறியுள்ளது அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கோவா பீச்சுக்கு சென்று பிகினி தரிசனம் கொடுத்து வந்த கிரணா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
திருப்பதியில் சாமி தரிசனம்
பல வருடங்கள் கழித்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ள நடிகை கிரண் அங்கே சுடிதார் அணிந்து கொண்டு ஹோம்லி லுக்கில் செம க்யூட்டாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். திருப்பதியில் கிரண் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
திருப்பம் வரும்
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அதே போல சினிமாவில் மீண்டும் நடிகை கிரணுக்கு பட வாய்ப்புகள் குவிய வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வாழ்த்தி வருகின்றனர். பிங்க் கலர் சுடிதாரில் பக்காவா இருக்கீங்க கிரண் என எக்கச்சக்க கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
அமலா பாலை போல
நடிகைகள் அடிக்கடி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். என்ன தான் கவர்ச்சியாக நடித்தாலும், ஆன்மிக சிந்தனையில் அதிகம் நாட்டமும் கொண்டு வருகின்றனர். நடிகை அமலா பாலை போலவே நீங்களும் கோயில் கோயிலா சுத்தப் போறீங்களா என்றும் சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.