எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
பத்து தல சிம்பு நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். கன்னட திரைப்படமாக MUFTI என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த பத்து தல என்றாலும் திரைக்கதையில் பல மாற்றங்களை செய்து உருவாக்கியிருக்கிறார் கிருஷ்ணா. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் முதலில் இப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு அவரின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு இப்படத்தின் நாயகனாக உருவெடுத்தார் சிம்பு.
விடுதலை வெற்றிமாறன் சூரியை நாயகனாக வைத்து எடுத்த திரைப்படம் தான் விடுதலை. முதலில் சிறு பட்ஜெட் படமாக ஆரம்பிக்கப்பட்ட விடுதலை அதன் பிறகு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு மிகப்பிரமாண்டமான படமாக மாறியது. சூரியுடன் இணைந்து இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இளையராஜாவின் இசையில் உருவான இப்படம் சமீபத்தில் வெளியானது. வழக்கம் போல வெற்றிமாறன் இம்முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். சூரியின் நடிப்பு, வெற்றிமாறனின் இயக்கம் என படத்தில் அனைத்துமே அசத்தலாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்
போட்டி சிம்புவின் பத்து தல மார்ச் 30 ஆம் தேதி வெளியாக சூரி நாயகனாக நடித்த விடுதலை மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. இரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்ததால் இந்த போட்டியில் எந்த படம் வெற்றி பெரும் என்ற ஆவல் கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமும் இருந்து வந்தது. இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் இரு படங்களுக்கும் சரி சமமான வரவேற்பே கிடைத்து வருகின்றது. பத்து தல திரைப்படம் கமர்ஷியல் படமாகவும், விடுதலை வித்யாசமான படமாகவும் இருப்பதால் இரு படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு படங்களும் வெற்றி படங்களாகவே உருவெடுத்துள்ளது
பொய்யான தகவல் இந்நிலையில் பத்து தல மற்றும் விடுதலை ஆகிய இரண்டு படங்களும் பொய்யான வசூல் விவரங்களை வெளியிடுவதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இரு படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் பொய்யான வசூல் விவரங்களை வெளியிட்டு வருகின்றது. பத்து தல படம் முதல் நாளில் கிட்டத்தட்ட ஐந்து கோடிகள் தான் வசூல் செய்துள்ளது. ஆனால் முதல் நாளில் ஏழு கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. அதே போல தான் விடுதலை திரைப்படமும் பொய்யான வசூல் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இதை இரு படங்களின் தயாரிப்பு நிறுவனமும் தவிர்த்திருக்கலாம் என கூறியிருக்கின்றார் பிஸ்மி