எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Superstar Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தவர்களோ தலைவருக்கு சுத்திப் போட வேண்டும் என்கிறார்கள். ரஜினி ரசிகர்களால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
ரஜினிகாந்த்தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தாவின் பெயரில் மும்பையில் கலாச்சார மையத்தை துவங்கியிருக்கிறார்கள். நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மைய திறப்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் இளைய மகள் சவுந்தர்யாவுடன் கலந்து கொண்டார். கருப்பு நிற பேண்ட், டிசர்ட், கிளீன் ஷேவில் ரஜினி சூப்பர் ஃபிட்டாக தெரிந்தார்.
தலைவர்
மகிழ்ச்சிநீத்தா அம்பானி கலாச்சார மைய திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படம் வைரலாகிவிட்டது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, வாவ், தலைவர் செம ஃபிட்டாக இருக்கிறார். இவரை பார்த்தால் 70 வயது என்று யாரும் சொல்ல முடியாது. இது என்ன புது லுக் தலைவரே?. ஜெயலிருக்காகவா இல்லை லால் சலாம் படத்திற்காகவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
க்யூட்
ஐஸ்வர்யாவழக்கமாக ரஜினி எங்கு சென்றாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தானே அழைத்துச் செல்வார். அப்படி இருக்கும் போது அம்பானி விழாவுக்கு ஏன் சவுந்தர்யாவை அழைத்துச் சென்றிருக்கிறார் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஐஸ்வர்யா தன் லால் சலாம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அதனால் அவரால் அப்பாவுக்கு துணையாக மும்பைக்கு செல்ல முடியவில்லை. அவ்வளவு தான்.
லால் சலாம்பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அந்த படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி என தகவல் வெளியானது. ரஜினியின் தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். அவர் இதுவரை ரஜினியுடன் சேர்ந்து நடித்தே இல்லை. அதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்.
Rajinikanth: என்னாது, மூத்த மகளுக்காக முஸ்லீமா மாறிட்டாரா ரஜினி?: பரபரக்கும் கோலிவுட்
ஜெயிலர்Rajinikanth:ரஜினி மீது கோபம்: பொன்னியின் செல்வன் 2 விழாவுக்கு தலைவரை அழைக்காத மணிரத்னம்?ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலை முடிந்ததும் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஜெயிலர் பட வேலையால் தான் பொன்னியின் செல்வன் 2 பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினியால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதற்கிடையே ரஜினி மீதான கோபத்தில் தான் மணிரத்னம் அவரை அழைக்கவில்லை என வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.