சென்னை: இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், ஜிபி முத்து நடித்துள்ள பம்பர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியவர் நடிகை ஷிவானி நாராயணன்.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அறிமுகமான ஷிவானி ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக
சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோயினாக மாறி உள்ளார். கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3வது மனைவியாக நடித்திருப்பார். அதே போல டிஎஸ்பி படத்தில் விஜய்சேதுபதியின் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். வீட்ல விசேஷம், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

பம்பர் ஹீரோயின்
செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள பம்பர் படத்தில் 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஷிவானி நாராயணன் நடித்துள்ளார். தூத்துக்குடியை சுற்றிய கதையாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த நிலையில் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது.
குடி குடி தூத்துக்குடி
96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையில் உருவாகி உள்ள குடி குடி தூத்துக்குடி பாடல் காதல், காமெடி, படத்தின் கதை என ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கிக் கொண்டே இருப்பது சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. மேலும், ஹீரோ யாரு, ஹீரோயின் யாரு, காமெடியன் யாரு, வில்லன் யாரு என்பதை செகண்ட் சிங்கிளில் தெளிவாக காட்டி உள்ளனர்.

நடு ரோட்டில் குத்தாட்டம்
சேலை கட்டி தூத்துக்குடி பெண்ணாகவே மாறியுள்ள பிக் பாஸ் ஷிவானி நடு ரோட்டில் குத்தாட்டம் போடும் காட்சிகளும் இந்த லிரிக் வீடியோவுக்கு நடுவே இடம்பெற்று ஷிவானி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. செம ஸ்லிம்மாக சுடிதாரில் ஹீரோ வெற்றியுடன் அவர் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.

துப்பாக்கியுடன் ஜிபி முத்து
பம்பர் படத்தில் காமெடியனாக பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து நடித்துள்ளார். ஹீரோ வெற்றியுடன் படகில் ஆட்டம் போடும் ஜிபி முத்து அரசியல்வாதி கெட்டப்பில் கையில் துப்பாக்கியுடன் பாடல் முழுக்க இடம்பெறுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரே வாரத்தில் வெளியேறினாலும் சன்னி லியோன் படம், அஜித்தின் துணிவு மற்றும் ஷிவானியின் பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ஜிபி முத்து.