அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட புயல்; பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு!
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்திருக்கிறது. பலமாக வீசிய புயல் காற்றாலும், சூறாவளியாலும் ஏராளமான வீடுகள், வணிக கட்டடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த இயற்கைச் சீற்றத்தின் விளைவாக 26 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.