எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Thirumavalavan praises Viduthalai Part 1: விடுதலை படம் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அது பற்றி சமூக வலைதளத்தில் விமர்சித்திருக்கிறார்.
விடுதலைவிடுதலை விமர்சனம்வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த அனைவரும் சூரியின் மாற்றத்தை பற்றி தான் இன்னும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாத்தியாராக வந்து அனைவரின் கைதட்டல்களையும் பெற்றுவிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் அந்த படத்தை பார்த்திருக்கிறார்.
திருமாவளவன்விடுதலை படம் பார்த்த திருமாவளவன் அது குறித்து ட்வீட் செய்துள்ளார். தான் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது, தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன் அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது என்றார்.
பாராட்டுதிருமாவளவன் மேலும் கூறியிருப்பதாவது, அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது என்றார்.
வெற்றிமாறன்தோழர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது ‘வெற்றிமாறன் படைப்பு’ என முத்திரை பதித்துள்ளார்.. #வெல்க_விடுதலை! என திருமாவளவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்
விடுதலை 2Viduthalai Part 1:விடுதலை புது சாதனைகள் படைக்கும்: பெரிய இடத்துலயே சொல்லிட்டாங்கவிடுதலை படத்தை பார்த்த அனைவரும் இரண்டாம் பாகத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன். ஜெயமோகனின் தூயவன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் விடுதலை என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகத்தில் விநியோகித்திருக்கிறது. விடுதலை படத்தை பார்த்த ரெட் ஜெயண்ட் மூவீஸின் செண்பகமூர்ததியோ, இந்த படம் பல சாதனைகள் படைக்கும் என ட்வீட் செய்தார்.