சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போஸ்ட்டுக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இன்ஜினியராக நடித்து அசத்தி இருப்பார். ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவின் கணவர்
நானும் ரவுடி தான் படத்தை விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 7 ஆண்டுகள் இருவரும் காதலித்தும், லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்தும் வந்த நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை ரிலீஸ் செய்த பின்னர் அனைவரும் அறிய திருமணம் செய்து கொண்டனர்.

அரசு சார்ந்த பொறுப்புகள்
இயக்குநர் விக்னேஷ் சிவன் சென்னையில் நடந்த உலக செஸ் போட்டி நிகழ்ச்சிக்கான இயக்குநராக பணியாற்றி இருந்தார். சமீபத்தில், போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட குறும்பட நிகழ்ச்சிக்கும் வெற்றியாளரை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக பணியாற்றி இருந்தார். தொடர்ந்து அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தி வருகிறார் விக்னேஷ் சிவன்.

அஜித் பட வாய்ப்பு
லைகா தரப்பில் அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த நிலையில், கடைசியில் அந்த வாய்ப்பு அவரது கையை விட்டு விலகிப் போனது. ஆனாலும், மனம் தளராத விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தின் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹேர் ஆயில் விளம்பரம்
இதற்கிடையே சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஹேர் ஆயில் ஒன்றின் விளம்பரத்தை செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. என்ன விக்னேஷ் சிவன் இப்படி இறங்கிட்டாரே என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஹீரோயின்களுக்கு போட்டி
பொதுவாக சின்னத்திரை முதல் வெள்ளித்திரை நடிகைகள் பலரும் தான் இன்ஸ்டாகிராமில் ஷாம்பு முதல் ஷாம்பைன் வரை இப்படி போஸ்ட் போட்டு விளம்பரம் செய்வார்கள். இயக்குநர் விக்னேஷ் சிவன் திடீரென இப்படி ஹேர் ஆயிலுக்கு விளம்பரம் செய்ததை பார்த்த ரசிகர்கள் நீங்களும் இப்படி விளம்பரத்தில் இறங்கிட்டீங்களா என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

தனியாக வந்த நயன்தாரா
மனைவி நயன்தாரா எங்கே சென்றாலும் கணவர் விக்னேஷ் சிவன் கூடவே பாதுகாப்புக்காக சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று நடந்த பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருதுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட செல்லவில்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

பிரதீப்பை வைத்து படம்
அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மிஸ் ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் அதே கதையை இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் என்றும் அந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இந்த கூட்டணிக்கு இதுவரை முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ஓகே சொல்லவில்லை என்றே கூறுகின்றனர்.