சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் திடீரென இன்ஸ்டாவில் இணைந்தது அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
இதனையடுத்து விஜய் ரசிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அவரை ஃபாலோ செய்துவருகின்றனர்.
இதனால் இன்ஸ்டாவில் முன்னிலையில் இருக்கும் சிம்புவை விஜய் வீழ்த்துவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இன்ஸ்டாவில் விஜய்
கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதாவது தலை காட்டும் விஜய் இதுவரை டிவிட்டரில் மட்டுமே அக்கவுண்ட் வைத்துள்ளார். தனது படம் குறித்த ஒருசில அப்டேட்களை மட்டும் அடிக்கடி ஷேர் செய்து வந்த நிலையில், திடீரென இன்ஸ்டாவிலும் என்ட்ரி கொடுத்து அதிரடி காட்டியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம எனர்ஜியில் உள்ளனர்.

சிம்பு ரசிகர்கள் பதற்றம்
விஜய் இன்ஸ்டா ஐடியை அவர் மட்டுமே ஹேண்டில் செய்வதாக டிஸ்கிரிப்ஷனில் போடப்பட்டுள்ளது. இதனால், விஜய் இன்ஸ்டாவில் அடியெடுத்து வைத்த அடுத்த நொடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்யத் தொடங்கிவிட்டனர். மேலும், விஜய்யின் இன்ஸ்டா ஐடியை சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதனால் சிம்பு ரசிகர்கள் தான் தற்போது பதற்றத்தில் உள்ளனர்.

இனி இதுதான் போட்டியே
கோலிவுட் செலிபிரிட்டிகளில் நடிகர் சிம்பு தான் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களுடன் முன்னணியில் உள்ளார். சிம்புவை 11.7 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். சிம்புவின் இந்த லீடிங்கை இதுவரை எந்த நடிகர்களாலும் பீட் செய்ய முடியவில்லை. இந்நிலையில், தற்போது விஜய் இன்ஸ்டாவில் இணைந்துள்ளதால், அவருக்கும் சிம்புவுக்கும் தான் இனி போட்டியே என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்
விஜய் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கி சில மணி நேரங்களிலேயே 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோயர்கள் லிஸ்ட்டில் இணைந்துவிட்டனர். இதனால் 24 மணி நேரத்திற்குள் ஃபாலோயர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தின் அப்டேட்ஸும் அடுத்தடுத்து வெளியாகி வருவதால், சீக்கிரமே சிம்புவை விஜய் பீட் செய்துவிடுவார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

விஜய்யின் லியோ டிபி
இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய விஜய், லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை தான் டிபியாக வைத்துள்ளார். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் செம்ம மாஸ்ஸாக இருக்கும் விஜய்யின் டிபியை ரசிகர்களும் தங்களது இன்ஸ்டா டிபியாக மாற்றி வருகின்றனர். லியோ அப்டேட் வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இன்ஸ்டா ஐடியை சர்ப்ரைஸ் ட்ரீட்டாக கொடுத்து அசத்தியுள்ளார் விஜய்.