சீரகச் செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடிஆகும்.
இதன் தண்டு பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்துமல்லி இலையைப் போலவும்) இருக்கும்.
செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறு மலர்கள் தோன்றும்.
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.
இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது
சீரகத்தில் சோடியம்,பொட்டாசீயம்,விட்டமின் C,இரும்புச்சத்து,விட்டமின் B6,மெக்னீசியம்,விட்டமின் C,கோபாலமின் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.
தினமும் சீரகம் தண்ணீர் குடிக்கலாமா?
சீரக நீர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும், ஒரு சில பக்க விளைவுகளை கொண்டிருந்தாலும் அறிவியல் ரீதியாக அது நிரூபிக்கப்படவில்லை.
அதுவே உடல் எடையை குறைக்க சீரகத்தண்ணீ்ர் அருந்துவீர்கள் எனில் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டுவிட்டு அருந்தவேண்டும் .
ஒரு நாளில் அதிக சீரகத்தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சல், அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கூட ஏற்படலாம்.
சீரகத்திலுள்ள பயன்கள்
சீர்+அகம்=சீரகம் அதாவது அகத்தை சீராக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது அவசியம்.
சீரகத்தில் வைட்டமின் E சத்தும் உள்ளது.
அது இளமையை தக்கவைக்க உதவும்.
சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும்.
முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும்.
முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.
வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.