அம்மாவுக்கு தெரியாமல் அமேசானில் 10 லட்சத்திற்கு பொம்மைகளை ஆர்டர் செய்த 5 வயது குழந்தை!


அமெரிக்காவில் 5 வயது சிறுமி அம்மாவின் தொலைபேசியை எடுத்து அமேசானில் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு வெறும் விளையாட்டு சாமான்களை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணைய இணைப்பு மற்றும் ஷாப்பிங் ஆப்கள் உள்ள எவரும் தங்கள் மளிகை சாமான்கள் மற்றும் பிற பொருட்களை மிக ஏளிமையாக ஆர்டர் செய்துவங்கும் அளவிற்கு வசதிகள் வந்துவிட்டன. இது நிச்சயமாக வாழ்க்கையை எளிதாக்கும் அதே வேளையில், ஒருவரின் விரல் நுனியில் அனைத்தும் கிடைப்பதில் சில ஆபத்துகள் உள்ளன.

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், ஐந்து வயது சிறுமி ஒருவர் தனது அம்மாவின் அமேசான் கணக்கு மூலம் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார்.

அம்மாவுக்கு தெரியாமல் அமேசானில் 10 லட்சத்திற்கு பொம்மைகளை ஆர்டர் செய்த 5 வயது குழந்தை! | 5 Year Old Order 10 Lakh Worth Toys AmazonJessica Nunes

அமெரிக்காவின் மசாசூசெட்ஸைச் சேர்ந்த 5 வயது சிறுமியான லீலா வாரிஸ்கோ (Lila Varisco) இந்த ஆர்டரை செய்யும்போது தனது அம்மாவுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அம்மாவின் தொலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஜீப் மற்றும் 10 ஜோடி cowgirl பூட்ஸை ஆர்டர் செய்ய “Buy Now” என்பதைக் கிளிக் செய்தார்.

 அவரது தாயார் ஜெசிகா நூன்ஸ், தனது அமேசான் வரலாற்றைப் பார்த்த பிறகு வாங்கியதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

பைக்குகள் மற்றும் ஜீப் மட்டும் சுமார் ரூ. 10 லட்சத்திற்கு வந்தது. பூட்ஸ் மட்டும் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு இருந்தது.

அம்மாவுக்கு தெரியாமல் அமேசானில் 10 லட்சத்திற்கு பொம்மைகளை ஆர்டர் செய்த 5 வயது குழந்தை! | 5 Year Old Order 10 Lakh Worth Toys AmazonJessica Nunes

அதிர்ஷ்டவசமாக, நூன்ஸ் சில ஆர்டர்களை கேன்சல் செய்தார். இருப்பினும், ஐந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு குழந்தைகள் ஜீப்பின் ஆர்டரை கேன்சல் செய்வதற்கு தாமதமாகிவிட்டது.

குழந்தையின் மோட்டார் சைக்கிள்கள் nonreturnable ஆர்டர் ஆகும், அதாவது ஒருமுறை வாங்கினால் திரும்பப் பெற மாட்டாது.

இதையடுத்து, வேறு வழியில்லாமல் தன் மகளின் தவறைச் சமாளிக்கதான் வேண்டும் என்பதை எடுத்துக்கொண்டார். மேலும், இதுபோன்று பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிருத்தியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.