சிவகங்கை மாவட்டம் குயவன்வலசை பகுதியில் அரசுப்பேருந்தும் ஜல்லி ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து மதுரைக்குச் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து திருமாஞ்சோலை அருகே சென்ற போது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்திற்குள்ளானது.
லாரி அதே இடத்தில் கவிழ்ந்த நிலையில், பேருந்து சாலையிலிருந்து வலதுபுறமாக கீழே இறங்கி சில அடி தூரம் சென்றது.
விபத்தில், பேருந்தில் பயணித்த கீழக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திருப்பதி, ராகினிபட்டியைச் சேர்ந்த கங்கா உள்பட 3 பெண்கள் உயிரிழந்தனர்.
காயமடைந்த பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரன், லாரி ஓட்டுநர் பாலமுருகன் உள்பட 10 பேரை பொதுமக்கள் மீட்டு சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தின் கிளட்ச் பெயிலியரானதா அல்லது லாரி ஓட்டுநர் கண் அயர்ந்து விட்டாரா என சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.