அருந்ததியர் இட ஒதுக்கீடு.. 6 சதவீதமாக உயர்த்துக.. தமிழக அரசுக்கு கோரிக்கை!

தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனம் கமிஷன் பரிந்துரையின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்ததியர் இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி மக்கள் கட்சி மாநில நிறுவனர் மற்றும் தலைவர் வடிவேல் ராமன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூகநீதி மக்கள் கட்சியின் சார்பில் மாநில அளவிலான முதல் மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் “அருந்ததியர்கள் தூய்மை பணிகளை செய்வதால் மற்றவர்கள் அவர்களை அவமதிக்கின்றனர். எனவே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து சமுதாய மக்களும் தூய்மை பணிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும்.

சக்கிலியர், மாதிகா, பகடை, மாதாரி, தோட்டி, செம்மான், ஆதி ஆந்திரா ஆகிய அனைத்து உட்பிரிவினரையும் அருந்ததியர் என அழைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

எஸ்சிக்கள் 3 உட்பிரிவுகளாக இருப்பதால் ஆதி திராவிடர், அருந்ததியர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர்  ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதி அல்லது எஸ்சி நலத்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

கலப்புத்திருமணம் செய்பவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மானியம் ரூபாய் 10 லட்சமாக உயர்த்த வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்கள் அருந்ததியருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 72000 கீழ் சான்றிதழ் வழங்காததால் ஏழைகள் அரசின் சலுகை பெற முடிவதில்லை. எனவே ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 2 லட்சமாக உயர்த்த வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.