சூரத்: அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்திக்கு ஏப்.13 வரை ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏப்.13-ல் விசாரணைக்கு வருகிறது.