சேலம்: அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழுங்க ஆடு மாடு கோழி என சீர்வரிசைகள் குவிக்கிறது. தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பகுதிகள் விழாக் கோலம் போல காட்சியளிக்கின்றன.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற நாள் முதல் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று சேலம் வந்த அவருக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட எல்லைகளிலும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர் .
நேற்று மாலை சேலம் வந்த அவருக்கு வான வேடிக்கை, தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வானவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று நெடுஞ்சாலை நகரில் அவரது வீட்டில் முகாம்மிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணி அணியாக தாரை தப்பட்டை உடன் சீர்வரிசியுடன் வருவதால் அந்த பகுதியை விழாகோலம் பூண்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க தங்களது ஆதரவுகளுடன் ஆட்டுக்குட்டி, கன்று குட்டி மற்றும் கோழி ஆகியவற்றோடு தேங்காய் பழம் இனிப்பு வகைகளை சீர்வரிசையாக மேளதாளத்துடன் எடுத்து வந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதே போல தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என நெடுஞ்சாலை நகர் களை கட்டி உள்ளது பல மணி நேரம் நின்று கட்சித் தொண்டர்களை நேரடியாக சந்தித்து சால்வை மாலை மற்றும் அவர்கள் கொடுத்தும் பரிசுகளை மகிழ்ச்சியோடு எடப்பாடி பழனிசாமி வாங்கி வருகிறார்.
நேற்று முதல் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் முகமிட்டுள்ளதால் அந்த பகுதியே விழா கோலமாக காட்சி அளிக்கிறது..