ராஷ்மிகா மந்தனா மற்றும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் டேட்டிங்: ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் டேட்டிங் வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது. மேலும் இருவரும் பல்வேறு நேரங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். அத்துடன் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் தான் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் பிரிந்துவிட்டார்களோ என பேச்சு கிளம்பியிருக்கிறது.
இந்நிலையில் தற்போது மும்பை விமான நிலையத்தில் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக வந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது குழப்பம் அடைந்து, பலவிதமாக பேசத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றிலும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக கலந்து கொண்டார்கள். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார் என ரசிகர்கள் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.
இதனிடையே இவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், தற்போது ராஷ்மிகா மற்றும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஜோடியாக சுற்றுகிறனர். அதனால் மக்கள் அவர்களை பற்றி அதிகளவில் பேசுகிறார்கள். ராஷ்மிகாவுக்கு ஸ்ரீனிவாஸை மிகவும் பிடித்திருக்கிறது, இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இருபினும் ராஷ்மிகாவும், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும் காதலிப்பது உறுதியாகவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியான முதல் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
முன்னதாக ராஷ்மிகா மந்தனா கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது இவர் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெயின்போ என்கிற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் சாகுந்தலம் படத்தில் நடித்துள்ள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.