இன்று காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டு திருவிழா நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3ம் தேதி) தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேர் திருவிழாவை முன்னமுன்னிட்டு இன்று (ஏப்ரல் 3ஆம் தேதி) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.