இன்ஸ்டாகிராம் – புதிய சாதனை படைக்கும் விஜய்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் பக்கம் அதிகம் வராமல் இருக்கிறார்கள். சிலர் வந்தபின்னும் அதிகமாக செயல்படாமல் உள்ளார்கள். அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள விஜய், அஜித் இருவரில் விஜய் சார்பில் ஏற்கெனவே ஒரு டுவிட்டர் தளம் மட்டும் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வந்தது. அதில் கூட எப்போதாவது ஒரு முறைதான் பதிவுகள் இடம் பெறும். இந்நிலையில் நேற்று காலை திடீரென விஜய் பெயரில் இன்ஸ்டாகிராம் தளக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியன் பாலோயர்களை அந்தத் தளம் பெற்றது. அது மட்டுமல்லாது விஜய்யின் முதல் பதிவான 'ஹலோ நண்பாஸ் அன்ட் நம்பிஸ்' 104 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகளைப் பெற்றது. தற்போது அந்தப் பதிவு 3.9 மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது. இதன் மூலம் அதிக லைக்குகளைப் பெற்ற சினிமா பிரபலத்தின் பதிவு என்ற சாதனையையும் படைத்துள்ளது.

விஜய் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு வந்ததை பல சினிமா பிரபலங்கள் வரவேற்று பதிவிட்டுள்ளனர். இனி, விஜய்யின் ஒவ்வொரு பதிவும் புதுப்புது சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரசிகர் மன்றமே வேண்டாம் என்ற எப்போதோ கலைத்துவிட்ட அஜித், எந்தக் காலத்திலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர வாய்ப்பில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.