சமூகவலைதளங்களில் எங்கு திரும்பினாலும் நடிகர் விஜய், அவர் நடிக்கும் படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான போஸ்டர் வைரலாகியுள்ளது. அதற்கு காரணம், அவருடைய இன்ஸ்டாகிராம் பிரவேசமாகும்.
ஏற்கனவே ட்விட்டரில் அவர் இருந்தாலும், சமூகவலைதளங்களில் அவர் பெரியளவில் ஆக்டிவாக இருக்கமாட்டார். ஆனால் இனி வரும் காலம் அப்படியிருக்க முடியாதே. திரைப்படங்களுக்கும் கலைப்படைப்புகளுக்கும் நிச்சயம் ப்ரோமோஷன் தேவைப்படுகிறது.
அதுவும் நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் வியாபாரம் பெரியளவில் இருக்கும். அதற்கு அவர் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதன்காரணமாகவே ட்விட்டரை தொடர்ந்து, அவர் இன்ஸ்டாவுக்கு வந்துள்ளார்.
விஜய் அக்கவுண்ட் தொடங்கி வெகு சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும். அதற்குள் அவருக்கான ஃபோலோயர்ஸுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போதைய நேரத்தில் அவருக்கு 4 மில்லியன் போலோயர்ஸுகள் உள்ளனர்.
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கிய சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் ஃபோலோயர்ஸ் கொண்ட சினிமா பிரபலம் என்கிற சாதனையை விஜய் படைத்துள்ளார். அவருக்கான ஃபோலோயர்ஸுகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி, புதியதாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். அவரை 2.74 லட்சம் பேர் ஃபோலோ செய்கின்றனர். தனது குடும்பம் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களை ஷாலினி அதில் ஷேர் செய்து வருகிறார்.