சுவிஸ் அரசு, இளைஞர்களுக்காக மூன்று புதிய ரயில் பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது.
அந்த மூன்று பாஸ்கள் என்னென்ன?
முதலாவது, AG Night Pass. இதன் விலை ஆண்டொன்றிற்கு 99 சுவிஸ் ஃப்ராங்குகள். இந்த பாஸ் வைத்திருக்கும் இளைஞர்கள், மாலை 7.00 மணிக்குமேல் சுவிஸ் ரயில்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். அத்துடன், இந்த பாஸ் வைத்திருப்பவர்கள், வார இறுதி நாட்களில், காலை 7.00 மணிக்கு முன்பு வரை ரயில்களில் அதைப் பயன்படுத்தி பயணிக்கலாம்.
இரண்டாவது, Friends Day Pass. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் நான்கு நண்பர்களாக, ஆளுக்கு 20 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவில் எங்குவேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம்.
lenews
மூன்றாவது, Tandem Pass. இந்த பாஸ் வைத்திருக்கும் இளைஞர் ஒருவர், AG பாஸ் வைத்திருக்கும் நிலையில், 20 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவில் தங்களுடன் ஒரு நண்பர் அல்லது தோழியை ரயிலில் அழைத்துச் செல்லலாம்.
அந்த நண்பர் அல்லது தோழி, 25 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும்.
இந்த மூன்று பாஸ்களுமே, 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.