சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் முன்னணி கதாபாத்திரமான ஜனனி பாத்திரத்தில் நடிப்பவர் மதுமிதா. இவர் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த தொடர் தற்போது தமிழ்நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
பல்வேறு முக்கிய விஷயங்களை பேசுவதால் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக இதில் குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்து கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பெண்கள்
மேலும் அவருக்கு மனைவியாக நடிக்கும் கனிகா கதாபாத்திரமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் வரும் பெண்கள் கதாபாத்திரங்கள் எல்லாமே கவனம் பெற்றுள்ளது. பெண் விடுதலை, பெண்களுக்கு எதிராக திணிக்கப்படும் அழுத்தங்கள், பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி என்று பல விஷயங்களை பற்றி இந்த சீரியல் பேசுகிறது. இதனால் பெரிய அளவில் இந்த சீரியல் பெண்கள் இடையிலும் குடும்பத்தினர் இடையிலும் வரவேற்பை பெற்று இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் விரும்பி பார்க்கும் சீரியலாகவும் இது இருக்கிறது.
டிஆர்பி
டிஆர்பியில் தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீரியலாகவும் இது இருக்கிறது. இப்படிப்பட்ட சீரியலில் முன்னணி கதாபாத்திரமான ஜனனி பாத்திரத்தில் நடிப்பவர்தான் மதுமிதா. இந்த தொடரில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு உள்ளது. தமிழில் நடித்தாலும் இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்து வளர்ந்தவர். 1995 மார்ச் மாதம் பிறந்த இவருக்கு 27 வயசுதான் ஆகிறது. பெங்களூரில் இருக்கும் மவுண்ட் காரமெல் கல்லூரியில் படித்தவர்தான் இவர்.
என்ன செய்கிறார்
2018ல் தெலுங்கில் ஸ்டார் மா சேனலில் மனசுன்னு மனசாய் சீரியலில் நடித்தவர் அதன் மூலம் சீரியல் உலகிற்குள் அறிமுகம் ஆனார். அந்த சீரியல் ஹிட் அடித்த பின் கன்னடாவில் பல சீரியல்களில் நடித்தார், தெலுங்கு, கன்னடா இரண்டு சீரியல் உலகிலும் இதன் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அங்கே எல்லோருக்கும் இடையில் அதிகம் கவனிக்கப்பட்ட நிலையில் தமிழுக்கு வந்தார். இவருக்கு 2 தங்கைகள் இருக்கிறார்கள். அவர்களும் சீரியலில்தான் நடிக்கிறார்கள். இவர் சீரியலுக்கு இடையில் மும்பையில் வாழ்ந்து வந்தார்.
கன்னடா
கன்னடா மொழியில் மட்டும் இவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் பல்வேறு சீரியல்களில் நடித்து உள்ளார். அங்கே தொடர்ந்து நடித்து வரும் இவர் அதற்கு இடையில் தமிழுக்கு நடிக்க வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவரும் பெங்களூரில்தான் வசித்து வருகிறார். மதுமிதா கணவர் பிஸ்னஸ் செய்து வருகிறார். இவர்கள் திருமணம் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு சொந்தமாக மும்பையில் ஒரு வீடும் உள்ளது. மதுமிதா தற்போது தமிழ் சீரியல் உலகில் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து இருக்கிறார். அவருக்கு வேறு சீரியல் ஆபர்களும் வந்து கொண்டு இருக்கிறதாம். ஆனால் ஏற்கனவே 3 மொழிகளில் நடிப்பதால் இனியும் புதிய சீரியல்களில் நடிக்க அவருக்கு நேரம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த எதிர்நீச்சல் சீரியல் இன்னும் 5-6 வருடங்களாவது ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதுவரை இவர் வேறு தமிழ் சீரியல்களில் நடிப்பது கஷ்டம் ஆகும்.