சென்னை: விடுதலை படத்தில் கலக்கிய நடிகை பாவனி ஸ்ரீ பற்றி நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர்.
“கொஞ்சம் அந்த மூட்டையை இறக்கி வைக்கிறது”.. “மூட்டை யார் தூக்கி வைக்கிறது?”.. “என் பேரு தமிழ் செல்வி”.. “வேலையில பிரச்சனை இருக்குன்னு சாப்பிடாமா” இருக்காதீங்க.. என்று ஒவ்வொரு டயலாக்கிலும் அழகும்.. அப்பாவித்தனமும் கொஞ்ச நடித்து இருந்தார் பாவனி ஸ்ரீ.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள விடுதலை 1 படத்தில் பாவனி ஸ்ரீ நடித்த விதம் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அப்படியே அசப்பில் மலைவாழ் பெண்ணாக இவர் நடித்த விதம்.. மூட்டையை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் நடத்த விதம் கண்ணில் எடுத்து ஒற்றிக்கொள்ளலாம் என்று சொல்லும் அளவிற்கு அழகாக இருந்தது.
விடுதலை
பவானி ஸ்ரீ நடிகர் ஜிவி பிரகாஷின் சொந்த தங்கச்சி ஆவார். அவர் இயக்குனர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2020ல் இவர் கா பே ரணசிங்கம் படத்தில் நடித்ததன் மூலம் இவர் பிரபலம் அடைந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடித்து இருந்தனர். அதேபோல் நெட்பிளிக்ஸில் வெளியான பாவ கதைகள் ஆந்தாலஜி படத்தில் தங்கம் படத்தில் இவர் நடித்து இருந்தார். இந்த படத்தில் கவனிக்கப்பட்ட பவானி ஸ்ரீ அதன்பின் வெற்றிமாறனிடம் அறிமுகம் ஆனார்.

அறிமுகம்
இயக்குனர் வெற்றிமாறனுடன் ஜிவி பிரகாஷ் ஆலோசனை ஒன்றை செய்துகொண்டு இருந்த போது பவானி ஸ்ரீயை பற்றி பேச்சு வந்த நிலையில், கடைசியில் பவானி ஸ்ரீயை விடுதலை படத்தில் நடிக்க வைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 1994ல் சென்னையில் பிறந்த பவானி ஸ்ரீ அங்கேயே வளர்ந்து இருக்கிறார். அவருக்கு தற்போது 22 வயதாகிறது. இவருக்கு நடிப்பதை விட சினிமாவில் இயக்குனர் ஆவதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. இதனால் அவர் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

துணை இயக்குனர்
பல்வேறு படங்களில் இவர் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். முக்கியமாக தமிழ் தெலுங்கு படங்களில் இவர் துணை இயக்குனராக பணியாற்றினார். அதன்பின் தெலுங்கு வெப் சீரியல் ஹை பிரிஸ்டஸ் என்ற தெலுங்கு தொடரில் 2019ல் அறிமுகம் ஆனார்.
க பே ரணசிங்கம்
பாவ கதைகள்- தங்கம் பகுதி
நண்பன் ஒருவன் வந்த பிறகு
விடுதலை பகுதி 1
விடுதலை பகுதி 2
ஹை பிரிஸ்டஸ் போன்ற இணையத்தொடர்களில் இவர் நடித்து உள்ளார்.

பாராட்டு
இந்த நிலையில்தான் தற்போது விடுதலை 1 படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது. முக்கியமாக இவர் கண்ணீர்விட்டு அழுகும் காட்சிகள், கோவிலில் வைத்து பிளாஷ்பேக்கை சொல்லும் காட்சிகள், கடைசியில் போலீஸ் சித்திரவதையை அனுபவிக்கும் காட்சிகள் என்று எல்லா காட்சிகளிலும் மிக சிறப்பான நடிப்பை பதிவு செய்து இருந்தார். விடுதலை படத்தில் கலக்கிய நடிகை பாவனி ஸ்ரீ பற்றி நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர். விடுதலை படத்தை தொடர்ந்து இவரின் இன்ஸ்டராகிராம் பக்கம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.