பெங்களூரு,
ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் ரீஸ் டாப்லி காயம் அடைந்தார். ஆட்டத்தின் 8வது ஓவரில் திலக் சர்மா அடித்த பந்தை, தடுத்தபோது தடுமாறி டாப்லி கீழே விழுந்தார். இதில் தோள்பட்டை பகுதியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து போட்டியில் இருந்து பாதியிலேயே டாப்லி வெளியேறினார் . காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தால் டாப்லி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :