கனடா எல்லையில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது…


கனடா அமெரிக்க எல்லையில் 8 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களில், உயிரிழந்த இந்தியர்களின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன.

கனடா அமெரிக்க எல்லையில் கண்டெடுக்கப்பட்ட 8 சடலங்கள்

கடந்த வியாழக்கிழமை, அதாவது 30.3.2023 அன்று, கனடாவின் கியூபெக் மாகாணப்பகுதியில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக 8 உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

கனடா எல்லையில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது... | Indians Found Dead On Canadian Border

Submitted by police source in India

இந்தியர்களின் விவரங்கள்

உயிரிழந்தவர்களில், நான்கு பேர் இந்தியாவின் குஜராத்திலுள்ள Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி பொலிஸ் அதிகாரியான Achal Tyagi தெரிவித்துள்ளார். அவர்கள் பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20).
இவர்கள் அனைவரும், இரண்டு மாதங்களுக்கு முன் கனடாவுக்கு சுற்றுலா சென்றதாக இந்தியாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் இந்திய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

கனடா எல்லையில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது... | Indians Found Dead On Canadian Border

Submitted by the family

உயிரிழந்த மற்றவர்கள் யார்?

இந்த நால்வர் தவிர்த்து, மேலும் நான்கு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina (Monalisa) Zenaida Iordache (28).

Florinஇடம் இரண்டு கனேடிய பாஸ்போர்ட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை அவரது இரண்டு வயதுக் குழந்தை, மற்றும் ஒருவயது குழந்தை ஆகியோருக்குச் சொந்தமானது. அந்தக் குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன.

இதற்கிடையில், Florin கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.