கல்யாணம் பண்ணிக்கிறேன்.. 40 வயது வரை காத்திருந்த நடிகை.. ஏமாற்றிய \"ஹீரோ\".. குலுங்கும் கோலிவுட்

சென்னை: 40 வயதை கடந்த பிரபல நடிகை ஒருவரை நடிகர் ஒருவர் ஏமாற்றிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் கோலிவுட்டை தற்போது புரட்டி போட்டு உள்ளது.

தற்போது 40 வயதாகும் அந்த நடிகை.. கொஞ்சம் வருடங்கள் முன்பு வரை சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருந்தார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். இரண்டு மாநிலங்களிலும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்கள்

ஹீரோக்களுக்கு இணையாக அவருக்கு ரசிகர்கள் படை இருந்தது. அவரும் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். இந்த நிலையில்தான் அவர் ஒரு நடிகருடன் இணைந்து சில படங்களில் நடித்தார். இருவரும் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்தன. அப்போதே இவர்கள் காதலிப்பதாக செய்திகள் உலவி வந்தன. அதற்கு ஏற்றபடி இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே இடங்களில் தோன்றிய சம்பவங்கள் கூட நடந்தன. இதனால் இவர்களை பற்றிய கிசு கிசுக்கள் தீவிரம் அடைந்தன.

 தீவிரம்

தீவிரம்

இந்த நிலையில்தான் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த ஒரு படம் தேசிய அளவில் ஹிட் அடித்தது. அந்த படத்தில் இவர்கள் ஜோடியும் பெரிய அளவில் புகழப்பட்டது. ஆஹா நன்றாக இருக்கிறார்களே. இவர்கள் இரண்டு பேருமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படியே இவர்களின் திருமண பேச்சும் நடந்தது. ஆனால் ஜாதி பிரச்சனை மற்றும் அந்த நாயகி உடல் எடை போட்டது உள்ளிட்ட பிரச்சனைகளால் இவர்கள் இடையே மோதல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இந்த கருத்து வேறுபாடு மோதலாக வெடித்து இருக்கிறது.

மோதல்

மோதல்

இந்த மோதலின் இறுதியில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அந்த நடிகர் கூறியதாக தெரிகிறது. அதோடு அந்த நடிகர் வேறு ஒரு நடிகையுடன் நெருக்கமாகஇருந்துள்ளார். இரண்டு பேருமே நெருக்கமாக பேசி வந்துள்ளனர். அந்த நடிகை மிகவும் இளமையானவர். நீண்ட காலமாக ஒன்றாக இவர்கள் நட்பாக இருந்துள்ளனர். இதன் காரணமாக இந்த நடிகையை கழற்றிவிட்டுவிட்டு இளம் நடிகையுடன் சென்றுவிடலாம் என்ற முடிவை எடுத்து இருக்கிறார் அந்த ஹீரோ.

40 வயது

40 வயது

ஆனால் இது எதுவும் அந்த நடிகைக்கு தெரியாது என்று கூறப்படுகிறது. தனக்காக அந்த நடிகர் திரும்பி வருவார் என்று 40 வயதிலும் திருமணம் ஆகாமல் காத்துகொண்டு இருக்கிறாராம். அதோடு அந்த நடிகர் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று இவர் ஜிம்மிற்கு செல்ல தொடங்கி விட்டாராம். அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க பயிற்சி செய்து வருகிறாராம். ஆனால் அந்த நடிகரோ இவரை மணக்கும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இவரை திருமணம் செய்தால் நன்றாக இருக்காது. மார்க்கெட் உள்ள சிறிய பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்.. இவருக்கு இப்போதே மார்க்கெட் இல்லை.. வயதும் ஆகிவிட்டது என்பதால் வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறாராம். பெரும்பாலும் இளம் நடிகை ஒருவரை அந்த நடிகர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.