காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணுக்கு இணை நோய்கள் இருந்ததாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. திரையரங்கு, வணிக வளாகங்கள், மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.