குழந்தைகளின் பேவரைட்.. டைரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் நெளிந்த புழு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டைரி மில்க் சாக்லேட்டில் புழு ஒன்று நெளிந்ததை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கரூர் வைசியா வங்கித் தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன். இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு நெடுஞ்செழியன் சென்றார்.

அங்கு அவருடைய குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்க எதை வாங்கலாம் என பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தைகளுக்கு டைரி மில்க் சாக்லேட் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த சாக்லேட்டை வாங்கினார்.

85 ரூபாய் சாக்லேட்

சுமார் 85 ரூபாய் மதிப்பிலான பெரிய டைரிமில்க்கை வாங்கிய வீட்டுக்கு கொண்டு சென்றார். அப்போது குழந்தைகளுக்கு சாக்லேட்டை காட்டியவுடன் மகிழ்ச்சியாக ஓடி வந்தனர். உடனே நானே பிரித்து தருகிறேன் என கூறி அந்த சாக்லேட்டை நெடுஞ்செழியன் பிரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 சாக்லேட்டில் புழு

சாக்லேட்டில் புழு

அந்த சாக்லேட்டில் புழு ஒன்று நெளிந்துபடியே சாக்லேட்டுக்குள் சென்றது. இது நிஜம்தானா என பல முறை கண்களை துடைத்துவிட்டு பார்த்தார். ஆம் ! குழந்தைகள் ஆசையாக சாப்பிடும் சாக்லேட்டில் புழு இருந்தது. உடனே கவரின் வெளிப்புறத்தில் உள்ள காலாவதி தேதியை பார்த்தார். அப்போது இந்த ஆண்டு செப்டம்பர் வரை என இருந்தது. பேக் செய்யப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என இருக்கிறது.

வாடிக்கையாளர் அதிர்ச்சி

வாடிக்கையாளர் அதிர்ச்சி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டில் புழு நெளிந்திருப்பதை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். சாக்லேட்டை இவர் பிரித்து கொடுக்காமல் குழந்தைகளிடமே கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும். நினைத்து பார்க்கவே பதைபதைப்பாக இருக்கிறது. குழந்தைகள் உண்ணும் உணவு பொருட்களில் இது போல் கவனக்குறைவு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலாவதியாகவில்லை

காலாவதியாகவில்லை

இது குறித்து அந்த நபர் கடைக்காரர்களிடம் கேட்ட போது சாக்லேட் காலாவதியாகவில்லை. அப்படியிருக்கும் உள்ளே புழு இருந்தால் எனக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பியதாகவும் இது முழுக்க முழுக்க கம்பெனியின் பொறுப்புதான் என்றும் தெரிவித்திருந்தார். அண்மைக்காலமாக உணவு பொருட்களில் கரப்பான் பூச்சி, புழு, எட்டுக்கால் பூச்சி, பூரான், பல்லி, எலி தலை என அதிர்ச்சியை கொடுக்கும் ஜந்துகள் உள்ளன.

விசாரணை

விசாரணை

ஏதோ திறந்திருக்கும் பொருட்களில்தான் இது போன்ற ஜந்துக்கள் இருக்கிறது என்றால் சீல் செய்யப்பட்ட ஒரு சாக்லேட்டில் எப்படி புழு வந்தது எப்படி என்பது குறித்து குழப்பமாகவே இருக்கிறது. ஒரு வேளை கெட்டு போன சாக்லேட்டில் கவரை மட்டும் நிறுவனம் மாற்றியுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.