கூகுள் நிறுவனத்தில் இலவச ஸ்நாக்ஸ், மதிய உணவு, லாண்டரி சேவைகள் ரத்து!

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஏனெனில் பெறப்படும் ஊதியத்தைத் தாண்டி, கூகுள் நிறுவனத்தில் அளிக்கப்படும் சலுகைகள் பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூறவேண்டும்.

Google

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ்கள், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவுகள் மற்றும் மசாஜ்கள் போன்ற சேவைகளைக் கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. 

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்துவதாக அல்லது குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இது குறித்து கூகுளின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரட் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையன்று அனுப்பப்பட்ட மெமோவில், “கூகுள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் கவனம் செலுத்த நிதியைத் திறமையாகப் பயன்படுத்த வேண்டும்.

அதோடு, மடிக்கணினிகளுக்கு நிறுவனம் செலவு செய்வதை நிறுத்தும். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச ஸ்நாக்ஸ், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவு போன்றவற்றைக் குறைக்க அல்லது நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்து இருந்தார். 

கூகுள் செய்தித் தொடர்பாளர் ரியான் லாமன் கிஸ்மோடோ கூறுகையில், “நாங்கள் பகிரங்கமாகக் கூறியது போல், மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் மூலம் நீடித்த சேமிப்பை உருவாக்க ஒரு நிறுவனத்தின் இலக்கு உள்ளது.

snacks

இதன் ஒரு பகுதியாக, நாங்கள் சில நடைமுறைகளைச் செய்கிறோம்.

இந்தச் செய்தியானது, சலுகைகளை முற்றிலும் விரும்பும் கூகுள் ஊழியர்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யாமல் இருக்கலாம்; ஆனால் நிறுவனம் நிதியைச் சேமித்து, செயற்கை நுண்ணறிவு உட்பட அதன் உயர் முன்னுரிமைப் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியமான நடவடிக்கையாகும்.

தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் சலுகைகள், பலன்கள் மற்றும் வசதிகளை கூகுள் தொடர்ந்து வழங்கும். ஆனால் நிறுவனம் அதன் வளங்களின் பொறுப்பாளர்களாக இருக்க உதவும் வகையில் சில மாற்றங்கள் செய்யும்” என்று அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.