திருவனந்தபுரம்: கோழிக்கோடு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் நபர் எனக் கூறப்படும் ஒருவரின் பையில் இருந்து இந்தி, ஆங்கிலக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், ரயில்வே போலீசார் உள்ளிட்டோர் சம்பவம் தொடர்பாக விசாரிக்கின்றனர். கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.