சிபிஐயின் முக்கிய பொறுப்பு நாட்டை ஊழலற்றதாக மாற்ற வேண்டும்: சிபிஐயின் வைர விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: நீங்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன், அவர்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இன்றும் அவர்கள் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர், ஆனால் நீங்கள் (சிபிஐ) உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும், எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன், அதிகளவில் ஊழல் செய்ய போட்டி இருந்தது. அந்த நேரத்தில் பெரிய ஊழல்கள் நடந்தன, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயப்படவில்லை, ஏனென்றால் அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக நின்றது. 2014-க்குப் பிறகு, ஊழல், கருப்புப் பணத்திற்கு எதிரான ஒரு மிஷன் முறையில் நாங்கள் செயல்பட்டோம்.

சிபிஐ சாதாரண குடிமகனுக்கு நம்பிக்கையையும் பலத்தையும் அளித்துள்ளது. நீதிக்கான முத்திரையாக சிபிஐ உருவெடுத்துள்ளதால், சிபிஐ விசாரணை கோரி மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று சிபிஐயின் வைர விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார்.

சிபிஐ போன்ற தொழில்முறை மற்றும் திறமையான நிறுவனங்கள் இல்லாமல் இந்தியா முன்னேற முடியாது. வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான மோசடிகள் வரை, சிபிஐயின் பணியின் நோக்கம் பன்மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் சிபிஐயின் முக்கிய பொறுப்பு நாட்டை ஊழலற்றதாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.