திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் கிராமத்தில் சிறுவர்கள் சிலர் தேன் கூட்டில் கலெறிந்ததால் தேனீக்கள் கொட்டியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
திருவள்ளூர் மாவட்டம் புள்ளரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னம்பாக்கம் பகுதியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
இந்த கிராமத்தை சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் அங்கு உள்ள மரத்தில் ராட்சத தேன்கூட்டில் கல் எறிந்ததால் ராட்சத தேனீக்கள் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ள மக்களை துரத்தி துரத்தி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
மூன்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் என ராட்சத தேனீக்களை கண்டு அலறி அடித்து ஓடும் நிலை உண்டானது.
மக்கள் பதறியடித்து தீப்பந்தம் மற்றும் வேப்பிலையுடன் ஓடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் இருபதுக்கும் மேற்பட்டவர்களை தேனீக்கள் கொட்டியதால் 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியோடு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இதுகுறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள ராட்சத தேன் கூட்டை கலைத்து தேனீக்களை விரட்டி வருகின்றனர்.
சும்மா இருந்த தேன் கூட்டில் கல்வீசிய சின்னவாண்டுகளால் ஊரே அல்லோலப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.