சேலையில் ஹாட் மாடலாக மாறிய யமுனா சின்னத்துரை
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான யமுனா சின்னதுரை 2006ம் ஆண்டு வெளிவந்த வெயில் படத்தில் அறிமுகமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் யமுனாவை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. தற்போது எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகமால் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் யமுனா அடிக்கடி போட்டோஷூட்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், அண்மையில் 'சேலையும் ரவிக்கையும்' என்ற பெயரில் பொட்டிக் ஒன்றை ஆரம்பித்துள்ள அவர், தனது ப்ராண்டை பிரபலபடுத்த தானே மாடலாக மாறிவிட்டார். விதவிதமான புடவைகளில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் யமுனாவின் இண்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வருகின்றன.