சென்னை: டாப் நடிகர் ஒருவருடன் இளம் நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் அவர். பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த அவர் சமீபத்தில் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து இருந்தனர். அந்த படத்தில் இவர்கள் நெருங்கி பழகி காதலில் விழுந்தனர்.
காதல்
இந்த காதல் சில காலம் போனது. அந்த நடிகைக்கு வயது மிக மிக குறைவு. அவர் மிக இளமையான நடிகை என்றாலும் அந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். அந்த நடிகருக்கு பல காலமாக பெண் பார்க்கும் படலம் நடந்து வந்தது. இந்த நிலையில்தான் அந்த நடிகரையே திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இவர்கள் வாழ்க்கை அதன்பின் நல்லபடியாகவே சென்றது. இருவரும் சந்தோஷமாகவே இருந்தனர்.
சந்தோசம்
அதோடு இவர்கள் ஒன்றாக வெளிநாடுகளுக்கு கூட பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் அந்த ஹீரோ மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அந்த நடிகை அப்படியே நடிப்பதை நிறுத்திவிட்டார். அந்த ஹீரோ நடிக்க வேண்டாம் என்று கூறியதால் இவர் நடிப்பதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது வரை எல்லாம் ஓகே. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் ஒரு டாப் நடிகரின் படம் வந்தது.
டாப் நடிகர்
அந்த டாப் நடிகரின் படத்தில் அந்த நடிகை திடீர் என்று ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் அவர் ஏகத்திற்கும் கவர்ச்சி காட்டி உள்ளார். அந்த டாப் நடிகருடன் ஏற்பட்ட நெருக்கம்தான் இப்படி கவர்ச்சி காட்ட காரணம் என்று கூறப்படுகிறது.
பிரிவு
இதையடுத்து இவர்கள் இருவரும் தற்போது சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நடிகை இப்போது ஏன் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும். காசுக்கா பிரச்சனை. அவர் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று அந்த நடிகரிடம் அவரின் நண்பர்கள் கேட்க தொடங்கி உள்ளனராம். இந்த மோதல் தற்போது டைவர்ஸ் வரை சென்றுள்ளதாம்.