சென்னை: நடிகர் விஜய் லியோ பட ஷூட்டிங்கிற்கு இடையில் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பம்னா ஆயிரம் பிரச்சனை இருக்கும். ஆனால் நமக்குன்னு இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான் என்று சீரியல் டைப் திராபையான வசனங்களை வைத்து வெளியான படம்தான் வாரிசு.
விஜயின் இந்த வாரிசு படம் தொடக்கத்தில் இருந்தே பீல் குட் படம் என்று விழாமல் செய்யப்பட்டாலும், அதில் இருந்த வசனங்களை பார்க்கும் போது.. ஹேய் இது சீரியல்ரா என்று சொல்லும் அளவிற்கு மோசமாக இருந்தது.
வசூல்
படம் நல்ல வசூலை பெற்றாலும் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. சங்கீத ஸ்வரங்கள்.. என்று பாடும் அளவிற்கு படம் பெரிய அளவில் மிக மிக மெதுவாக சென்றது. அதோடு படத்தில் பல பிற்போக்கான காட்சிகள் இடம்பெற்று இருந்தனர். மேலும் கடந்த சில படங்களாகத்தான் விஜய் படங்களில் நடிகைகள் ஹாட்டாக டான்ஸ் ஆடுவது இல்லாமல் இருந்தது. ஆனால் வாரிசு படத்தில் அது மீண்டும் வந்தது. இதை எல்லாம் வைத்து விஜயை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து கலாய்த்து இருந்தனர். நடிகர் விஜயின் ரசிகர்களே கூட அவரை கிண்டல் செய்து இருந்தனர்.
கிண்டல்
இந்த நிலையில்தான் நடிகர் விஜய் தந்து லியோ பட ஷூட்டிங்கிற்கு இடையில் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து கொண்டு இருந்தது. அங்கே ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து சென்னைக்கு விஜய் – திரிஷா திரும்பி வந்துள்ளனர். சென்னையில் படத்தின் ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளது. அங்கே இதற்காக செட் போடும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதன்பின் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடக்க உள்ளது.
கதை
இடையில் தற்போது ஓய்வில் இருக்கும் விஜய் நேற்று இன்ஸ்டாகிராம் வந்தார். அவர் இப்படி ஓய்வு நேரத்தில் கதை கேட்பது வழக்கம். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் ஒருவர் அவரிடம் கதை கேட்டு இருக்கிறார். கதையை கேட்டுவிட்டு விஜய் உடனே நோ சொன்னதாக கூறப்படுகிறது. அந்த தெலுங்கு இயக்குனர் ஏற்கனவே அல்லு அர்ஜுனை வைத்து படம் எடுத்த பிரபல இயக்குனர் ஆவார். ஆனால் அவரின் கதையை .. ஆளை விடுங்கடா சாமி என்று சொல்லாத குறையாக விஜய் நோ சொன்னதாக கூறப்படுகிறது.
ஏன் இப்படி
அதோடு பாலிவுட் இயக்குனர் ஒருவரும் விஜய்க்கு கதை சொல்ல முயன்று இருக்கிறாராம். பாலிவுட்டில் இன்ட்ரோ கொடுங்கள்.. தனுஷ் போல நேரடி பாலிவுட் படம் செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறாராம். ஆனால் விஜயா தனுஷ் செய்வார். ஆனால் நான் இப்போது ரிஸ்க் எடுக்க முடியாது. முதலில் ஏதாவது படத்தில் கெஸ்ட் ரோல் செய்யலாம். அதன்பின் படம்செய்யலாம் . நேரடியாக இந்தி படத்திற்கு சென்று ரிஸ்க் எடுக்க முடியாது. டப்பிங் செய்வதே நன்றாகத்தானே இருக்கிறது என்று விஜய் சொன்னதாக கூறப்படுகிறது. அதனால் இப்போதைக்கு விஜய் பிற மொழி படங்களில் நடிக்க மாட்டார் என்கிறார்கள் .