அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் மே 9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும் தமிழக சி.ஐ.டியு சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்களின் செயல் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிவிப்பில், “கடந்த 2013 ஆம் ஆண்டு 18 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 25 ம், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ரூபாய் 12ம், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்திற்கு ரூபாய் 3,5 ராத்திரி நேரத்தில் இந்த கட்டணத்தை இரண்டு மடங்காக வசூலித்துக் கொள்ளவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
2013-ல் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 40 -50 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போது மலையளவில் உயர்ந்து நிற்கிறது.
அரசு மீட்டர் வழங்காத ஒரே காரணத்தால் மட்டும் தான் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவில்லை. ஆட்டோ மற்றும் அனைத்து வாடகை வாகனங்களுக்கான முன்பதிவு செயலியை அரசு விரைவில் தொடங்க வேண்டும்.
தற்பொழுது செயல்பட்டு கொண்டிருக்கும் பை டாக்ஸிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் வலியுறுத்தி வரும் மே ஒன்பதாம் தேதி, தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்” என்று எஸ் பாலசுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.