தாக்குதல் நடத்த வந்த 10க்கும் மேற்பட்ட உக்ரைனின் டிரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள குப்யான்ஸ்க், கிராஸ்னி லிமான், டொனெட்ஸ்க், கெர்சான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி, ரேடார் சாதனங்கள், கவச வாகனங்கள், ஹெளவிட்சர் பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை அழித்து விட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், 4 பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்திய ரஸ்ய படையினருக்கு உக்ரைன் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும், ரஷ்ய ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.