திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம், கீழ்கதிர்பூர் பகுதிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பேருந்து தானே இயக்கவும் செய்தார்.
அப்போது பெரிய வளைவு ஒன்றில் பேருந்தை வளைக்க முயன்றுள்ளார் எம்எல்ஏ எழிலரசன். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த பள்ளத்தில் சிக்கி விபத்து உள்ளானது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பேருந்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பேருந்தின் சில தகரங்கள் மட்டும் சேதம் ஆகியது.
இது குறித்த காணொளி சமூக வளத்தலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
எம்எல்ஏ எழிலரசன் செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கீழ்கதிர்பூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிக்கு புதிய பேருந்து சேவையை க. செல்வம், M.P., அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தேன்.
நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், தொகுதி பார்வையாளர் மரு. அ.சுபேர்கான், ஒன்றியக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், போக்குவரத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.