திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் வரதாபுரம் ராமர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் (45). கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மனைவி கீர்த்தனா (30). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் கீர்த்தனா, நேற்று முன்தினம் மாலை வீட்டில் துணி துவைத்து விட்டு துணியை காய வைப்பதற்காக சுவர் ஓரம் இருந்த கேபிள் டிவி ஒயரை ஈரக்கையுடன் பிடித்துள்ளார். அப்போது அதிலிருந்து கம்பி மூலம் கீர்த்தனாவின் உடலில் மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் வந்தவர்கள் கீர்த்தனாவை பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.