தென்காசி : மனைவி நடத்தையில் சந்தேகம்.! ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய கணவர் !!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓடைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் ஏழாயிரம் பண்ணைக் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து வீரபாண்டிக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் செல்வி, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மனைவியை பிரிந்து இருந்த வீரபாண்டி, செல்வியை நேரில் சந்தித்து, சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரபாண்டி மீண்டும் தன் மனைவியோடு சண்டை போட்டு செல்வியை கீழே தள்ளிவிட்டு அவரது காதில் பலமாகக் கடித்துள்ளார்.
இதனால், அவர் வலியால் துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பலத்தக் காயமடைந்த செல்வியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வீரபாண்டியை தீவிர தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.