தைவானைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா பறக்கும் இந்தியன் 2 படக்குழு
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வரும் இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது தைவானில் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுகிறது. 8 நாட்கள் அங்கு நடைபெற உள்ள படப்பிடிப்பில் ஒரு சண்டை காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர், அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்று ஒரு பாடல் மற்றும் ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கப் போகிறார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் படப்பிடிப்பே இந்தியன்-2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு, தான் தைவான் சென்றுவிட்ட தகவலை ஒரு புகைப்படத்தின் மூலம் கமலஹாசன் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இயக்குனர் ஷங்கரும் தைவானில் தான் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.