நக்மாவைக் காதலித்தேனா? – 'போஜ்புரி' நடிகர் ரவிகிஷன் பதில்

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நக்மா. ஹிந்தி, தெலுங்கில் சில பல படங்களில் நடித்த பின்தான் தமிழில் அறிமுகமானார் நக்மா. ஷங்கர் இயக்கத்தில் 1994ல் வெளிவந்த 'காதலன்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்து ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த 'பாட்ஷா' படம் சூப்பர் ஹிட் ஆனதால் தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார்.

தமிழில் ஒரு முன்னணி நடிகருடன் காதல் ஏற்பட்டு அதனால் நடந்த பிரச்சனையால், அந்த நடிகரின் தலையீட்டால் நக்மா திரையுலகத்திலிருந்து ஓரங்கப்பட்டப்பட்டார் என்ற ஒரு கிசுகிசு இருக்கிறது. அதன்பின் போஜ்புரி மொழிப் படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார் நக்மா. அவருடன் ஜோடியாக நடித்த ரவி கிஷன் என்ற நடிகருடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார். அப்போதே தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரவி கிஷன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நக்மா உடனான காதல் கிசுகிசு பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், “நாங்கள் ஜோடியாக நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நான் திருமணம் ஆனவன் என்பது பலருக்கும் தெரியும். நான் எனது மனைவி பிரீத்தி சுக்லாவை பெரிதும் மதிக்கிறேன், அவர் மீது பயமும் உண்டு.

எனது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே என் மனைவி என்னுடன் இருக்கிறார். என்னிடம் பணம் இல்லாத போது கூட எனக்காக இருந்திருக்கிறார். எனது படங்கள் பெரும் வெற்றி பெற்ற போது நான் திமிர் பிடித்தவனாக நடந்திருக்கிறேன். என் மனைவிதான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொன்னார். அந்த வீட்டில் மூன்று மாதங்கள் இருந்து வெளியே வந்த பின் நான் முற்றிலும் மாறிப் போனேன். நான் அதனால் மிகவும் பிரபலமானனேன், அதே சமயம் ஒரு சாதாரண மனிதனாகவும் மாறினேன். எனது குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்தேன்,” என்று பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.