பிரபல தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றில் நடித்த நடிகை ஒருவரின் அழகிய முகத்தை பூஞ்சைத் தொற்று ஒன்று கோரமாக மாற்றியுள்ளது.
அமெரிக்க மாகாணங்களில் பரவிவரும் பூஞ்சைத் தொற்று
பூஞ்சைத் தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்ட டெனிஸ் (Denise DuBarry) என்னும் நடிகை பலியாகிவிட்டார்.
பிரபல தொலைக்காட்சித் தொடரான சார்லீஸ் ஏஞ்சல்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் டெனிஸ்.
Image: Getty Images
கோரமாக மாறிய முகம்
பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட தன் தாயைப் பார்க்கச் சென்ற டெனிஸுடைய மகளான நடிகை சமந்தா (Samantha Lockwood, 40), தன் தாய் இருந்த நிலையைப் பார்த்து, என் எதிரிக்குக் கூட அப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
தான் தன் தாயைப் பார்க்கும்போது, அவரது கண்களில் ஒன்று வெளியே பிதுங்கி, முகமும் நாக்கும் வீங்கி, தன் தாய் பார்ப்பதற்கு கோரமாக இருந்தார் என்கிறார் அவரைப் பார்க்கச் சென்ற சமந்தா.
Image: Getty Images/Science Photo Library RF
வேறொரு பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயதான டெனிஸ், மருத்துவமனையில் வைத்து பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துவிட்டார்.
அமெரிக்க மாகாணங்கள் 50இல், 28 மாகாணங்களில் Candida auris என்னும் அந்த பயங்கர பூஞ்சைத் தொற்று பரவிவருவது குறிப்பிடத்தக்கது.
Image: Penske Media via Getty Images