நீலகிரி : சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற மாணவி உயிரிழப்பு.!! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி.!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சரவணம்பட்டியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால், அவர் நேற்று தனது தோழி ஒருவரை அழைத்து கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததனால் மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகவும், உயிரிழந்த மாணவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்கும், அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவியின் மரணம் பெற்றோருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இருந்தாலும் அவரது வயிற்றில் கரு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.