மதுரை: மதுரை, அவனியாபுரம், பிரசன்னா காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (39). இவரது மனைவி மணிமாலா. தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஜெகதீஷ் மேலாளராக பணியாற்றினார். அப்போது அவர் பங்கு சந்தையில் முதலீடு செய்தார். முதலில் ஓரளவு லாபம் வந்தது. இதையடுத்து ஜெகதீஷ் அக்கம்பக்கம் கடன் வாங்கி முதலீடு செய்தார்.
திடீரென பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டு அவர் வாங்கிய பங்குகளின் விலை மிகவும் குறைந்தது. இதனால் ஜெகதீசனுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு, கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.