ஹைதராபாத்: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
