சென்னை: பாலியல் புகார் விவகாரத்தில் மகளிர் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன் என்று கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார். மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநரிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி நடத்திய விசாரணை நிறைவடைந்தது. கலாஷேத்ரா இயக்குநர் ரேவதியிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். கலாஷேத்ரா இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களிடம் விசாரணை நிறைவுபெற்றது. கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
